2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 443,435 கோடியே 6,468,000 ரூபாயாகும்

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (26) சமர்ப்பிக்கப்பட்டது.

இது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டமாகும்.

இதற்கமைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு- செலவுத் திட்டத்தில் செலவீனமாக

செலவீனம் 443,435கோடியே 6,468,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் செலவீனமாக 421,824 கோடியே 8,018,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21,610கோடியே 8,450,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.


இந்த செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 617,44 கோடியே 50இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே  50 இலட்சம் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி அனுர குமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவினமுமாக   மொத்தம் 111,715 கோடியே 9,980,000இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை  2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 2,992,980,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக 11,377,980,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 8,385,000,000 ரூபாய் அதிகமாகும்  

 பிரதமர் செலவினமாக  2025 ஆம் ஆண்டுக்கு 1,170,000,000 ரூபாய்வும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான  செலவீனமாக  975,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும்195,000,000 ரூபாய் குறைவானதாகும் .

அதேவேளை 2025 ஆம் ஆண்டு , சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு,  கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு ,பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,அமைச்சு,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுஉள்ளிட்ட இன்னும் சில அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி  ஒதுக்கீடுகளை விடவும் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 

இதேவேளை ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் வரவு செலவுத்திட்ட உரை  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவினால் எதிர் வரும்   நவம்பர் 7 ஆம் திகதி நிகழ்த்தப்படவுள்ளது

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வரவு -செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி  முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும் . 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .