2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நாளை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு, குருநாகல் பியவர ஹோட்டலில் நாளை ஞாயிற்றுக்கிழமை(17) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த பேராளர் மாநாட்டில், கட்சியின் யாப்புத் திருத்தம் மற்றும் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதுடன் எதிர்கால அரசியல் சூழ்நிலையை கட்சி எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் எற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X