எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு புதிதாக 430 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (20) ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹன் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
தற்காலிக கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடம், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதி முடிவடைந்ததும், இரண்டு வருட காலத்துக்குள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படுமென, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதியில் மாணவர்களுக்கான வகுப்பறைகள், நிர்வாக கட்டடம் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளடக்கியதாக அமையும் என, அவர் தெரிவித்தார்.



7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026