Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 25 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீர்க்கப்படாத பல அடிப்படை பிரச்சினைகள் நீண்டகாலமாக இருந்துவருகின்றன. இதனால் மக்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களையும், அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவற்றுக்குத் தீர்வுப் பெற்றுக் கொடுக்கும் வகையில், அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், விவசாய, மீனவ மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்த கலந்துரையாடலொன்று, அக்கரைப்பற்று தனியார் விடுதியில் இன்று (25) நடைபெற்றது.
தேசிய மீனவ பேரவையின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதற்கட்ட இக்கலந்துரையாடலில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
காணிப் பிரச்சினைகள், குடிநீர்ப் பிரச்சினைகள், யானைப் பிரச்சினைகள், கடலரிப்பு மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டன. இது தொடர்பில் மிக விரைவில் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் மாவட்ட இணைப்பாளர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ரீ.எம்.கமலராஜன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கிரோஜதன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago