2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அட்டப்பள்ள சம்பவம்; 21 பேருக்குப் பிணை

Editorial   / 2018 மார்ச் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், கனகராசா சரவணன்

அட்டப்பள்ள இந்துமயான விவகார ஆர்ப்பாட்டத்தின்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரும், நேற்று முன்தினம் (05) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில், அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சந்திரமணி சிவரஞ்சித், ஜெகநாதன் ரமணா, ஆர்த்திகா உள்ளிட்ட அறுவர் ஆஜராகி, முன்நகர்வு மனுவைச் சமர்ப்பித்து வாதாடினர்.

அந்த முன்நகர்வு மனுவை ஏற்றுக்கொண்ட நீதவான், 14 நாள் விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த 21 பேரையும், பிணையில் விடுதலைசெய்ய உத்தரவு பிறப்பித்தார்.

எதிர்வரும் 16ஆம் திகதி, 23 பேரும் மன்றில் ஆஜராகவேண்டுமென, தவணைத் திகதியையும் நீதவான் அறிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மன்றுக்கு வரவழைத்து, நீதவான் அறிவுறுத்திய பின்னர், பிணைமனு மீதான உத்தரவு வழங்கப்பட்டது.

அச்சமயம் நீதிமன்றுக்கு வெளியே அட்டப்பள்ள மக்களும் அரசியல்வாதிகளும் என, பெருந்திரளானோர் பலத்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தனர்.

அட்டப்பள்ள இந்துமயான விவகார ஆர்ப்பாட்டத்தின்போது, தாக்குதலில் ஈடுபட்டனரென்ற சந்தேகத்தின்பேரில் 23 பேரின் பெயர்கள் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பிரகாரம், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு, பெண்கள் இருவரைத்தவிர ஏனைய 21 பேரும், 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்படுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .