2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியறிக்கை நிறைவேற்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 12 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .

அட்டாளைச்சேனை தேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

இந்த அமர்வின் போது அடுத்தாண்டுக்கான நிதிறிக்கையை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா சபையில் சமர்ப்பித்தார். சபையின் தவிசாளர் உள்ளிட்ட 18 உறுப்பினர்கள் அமர்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது வாக்களிப்பில் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இரு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

நிதியறிக்கைக்கு ஆதரவாக 15 உறுப்பினர்களும், எதிராக ஓர்  உறுப்பினரும் வாக்களித்தனர். இதன் காரணத்தால் 14 பெரும்பான்மை வாக்குகளால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியறிக்கை நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .