2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில்  வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று  புதன்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபையின் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக தலா வீட்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுதியில் இரண்டு வீடுகள் அமைந்துக் கொடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனின்   நிதியொதுக்கீட்டில் திருக்கோவில் காயத்திரி கிராம ஸ்ரீசமாதிப்பிள்ளையார் கோவில்  கட்டட நிர்மாணத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீமெந்துப் பக்கெட்டுக்கள் அக்கோவில் குருக்களிடம் வழங்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .