Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக சுமார் 528 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், இன்று (25) தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அட்டாளைச்சேனை நகரில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வேலைகள் முன்னெடுக்கப்படும்.
வீதிகளின் இரு மருங்குகளிலும் புதிய மின்விளக்குகளைப் பொருத்துதல், வடிகான்களைப் புனரமைத்தல், நடைபாதை அமைத்தல், நவீன பஸ் தரிப்பு நிலையங்களை அமைத்தல் போன்ற அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago