Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நஞ்சாக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதிலிருந்து தவிர்த்துகொள்ள அரச அதிகாரிகள் முன்வந்து, மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
“ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப, நிரந்தரத் தீர்வு - ஹெலசுவய" எனும் தலைப்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அதிக நஞ்சூட்டப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதால், இலங்கை மக்களாகிய நாம் நோயாளிகளாக்கப்பட்டுள்ளதோடு, பல நோய்களை உள்வாங்கி வருகின்றோம்.
இன்றைய சமூகம், அதிகமாக நஞ்சுள்ள உணவுகளை விருப்பமாக உண்டு வருவதால், கொழுப்புகள் படிந்து பாரிய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றது. தற்காலத்தில் எவ்வாறான உணவுகளை உற்கொள்ள வேண்டும் என்று தெரியது போல், நவீன யுகத்தில் காண்பதை எல்லாம் உள்கொள்வதன் மூலம் மக்கள் பல நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அதிக இறப்புகளை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான உணவுகளில் இருந்து மக்களை விலக்கிக்கொள்வதற்கான விசேட செயலமர்வுகளை நடத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள மக்கள் தற்போது அதிகமாக நஞ்சு கலக்கப்பட்ட உண்வுகளையே பெரும்பாலும் பாவனை செய்து வருகின்றனர். அதன்மூலம், பாரிய சிக்கல்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை ஆங்கில மருத்துவத்தை விட ஆயுர் வேத மருத்துவம் நோய்களில் இருந்து பாதுக்காக அதிகமாக உதவுகின்றது.
இவ்வாறான நஞ்சற்ற உணவுகளை உள்கொள்வதில் இருந்து தவிந்துக்கொள்ள இலங்கை அரசின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமே "ஹெலசுவய"எனும் தலைப்பிலான விசேட செயலமர்வு திட்டம். இதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக விசேட திட்டங்களை கையாண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago