Princiya Dixci / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை கல்வியமைச்சால் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர்
எஸ்.பிரதீப் தெரிவித்தார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் முகமாக நீண்ட காலமாக விடுத்த கோரிக்கைக்கமைய, கல்விச் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்துடன் கல்வியமைச்சில் இம்மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை மிக விரைவில் தீர்த்து வைக்கப்படுமென, இராஜாங்க அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இதற்கான யோசனை முன்மொழிய ப்படவுள்ளதாகவும், தெரிவித்தார்.
நீண்டகாலமாகத் தொடரும் சம்பள ஒழுங்கீனம் சம்பந்தமாக அவ்வப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் 2019 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாகவும் அது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் வரவு -செலவுத் திட்டத்தில் இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், உப தலைவர் எஸ். பிரதீப் மேலும் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026