2025 மே 08, வியாழக்கிழமை

’அத்துமீறி எல்லைக் கல் இடுவதை நிறுத்தவும்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசதத்தில் முஸ்லிம்களின் விவசாயக் காணிகளில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி எல்லைக் கற்களை இடுவதை உடன் நிறுத்த வேண்டுமென, அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (08) அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொத்துவில் பிரதேசதத்திலுள்ள முஸ்லிம்களின் நெற்செய்கைக் காணிகள் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு மற்றும் நிலச் சுரண்டல் என்பன பல்லாண்டு காலமாக இடம்பெற்று வருகின்றது. இதனால் ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவித்தார்.

குறித்த காணிகளில் விவசாயம் செய்வதற்கும் தடை விதித்து வருவதோடு,  தடையை மீறும் பட்சத்தில், விவசாயிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றனர். இதன் காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, பொத்துவில் ஆமை வட்டுவான் எனும் பிரேதசத்தில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளுக்குள் நேற்று (07) அத்து மீறிய வன விலங்குத் திணைக்கள அதிகாரிகள், அங்கு எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர் எனவும் அதனையறிந்து ஸ்தலதத்துக்குச் சென்று குறித்த திணைக்கள உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றையடுத்து, அத்து மீறி இடப்பட்ட எல்லைக் கற்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளதாவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X