Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 03 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கையில் இன்று கூடுதலான மருந்துப்பாவனை அதிகரித்து வருவது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக முதியவர்கள் நோய் நிவாரணியாக அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு வருவது பக்க விளைவுகளுக்கு காரணமாக உள்ளதென அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய அதிகாரி ஏ.ஜே.எம்.நௌபல் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் இன்று(03) நடத்தப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகளினாலேயே அதிகமான நோய்களுக்கு நாம் ஆட்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதை எம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.
தேவையற்ற விடயங்களுக்காக நாம் கொடுத்து வரும் முக்கியத்துவத்திலும் பார்க்க எமது ஆரோக்கிய வாழ்வுக்கான உடற்பயிற்சி, போஷாக்கான நிறை உணவுகள் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்கள் போன்ற பற்றிய விடயங்களில் நாம் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியவிடயமாகும்.
மருந்துக்காகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் போன்றவற்றுக்காகவும் உழைப்பில் அதிகமான பணம் செலவீடு செய்யப்பட்டு வருவது அந்தக் குடும்பத்தின் ஆரோக்கியமான சுகவாழ்வுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே, பரீட்சயமான வைத்தியரின் ஆலோசனைகளைப் பெற்று நடப்பதுடன் எமது பழக்கவழக்கம், சுகாதார முறைமைகள், உணவுத்தெரிவு, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அனைவரும் ஆரம்பம் முதல் முயற்சிக்க வேண்டும் என்றார்.
27 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago