2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அதிபர் சேவை புதிய பிரமாண குறிப்பு தொடர்பான கலந்துரையாடல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை அதிபர் சேவை புதிய பிரமாண குறிப்பு தொடர்பான கலந்துரையாடல்  நிந்தவூர் அல் அஸார் தேசிய பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில்,இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.உதயரூபன் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை வலய அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது,புதிய பிரமாண குறிப்புக்கு அமைவான சேவை உள்ளீர்ப்பு, பதவி உயர்வு போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, சம்மாந்துறை தேசிய பாடசாலையில் வலய பிரதிநிதி எம். றஹீம் தலைமையில்  மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெற்றது.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் பல அதிபர்கள் கல்வி அமைச்சின் 1998/23 சுற்று நிருபத்துக்கு முரணாக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன் இவ்விடயத்தினை மாகாண கல்விச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும்,இலங்கை அதிபர் சேவை பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை கல்வி அமைச்சருக்கு முன்வைப்பதற்கு நாடளாவிய ரீதியில் ஏற்கெனவே அதிபர்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X