Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நிந்தவூர் - மாந்தோட்ட சந்தி, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி போன்ற இடங்களில் அனுமதியற்ற முறையில் நடைபெறும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (02) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நிந்தவூர் பொதுச் சந்தைக்கு வருகை தந்து அனைவரும் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் மரக்கறி வகைகளை பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீதி ஓரங்களில் வீடுகளுக்கு முன்பாக மீன் வெட்டி வியாபாரம் செய்யும் நடவடிக்கையும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதனை மீறி இடம் வழங்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பிரதேச சபையினால் பொது இடங்களில் சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
34 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago