Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை வீதி 5ஆம் கட்டைப் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நகருக்கு அனுமதிப்பத்திரமின்றி 5 கால் நடைகளை கொண்டு சென்ற இருவரை, நேற்று (16) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வாகனமொன்றையும் 5 கால்நடைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை வீதியில் நேற்று இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார், அக்கரைப்பற்று நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனத்தை சோதனையிட்ட போதே அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கொண்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதில் 3 பசு மாடுகளும் இரண்டு எருமை மாடுகளும் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
1 hours ago