2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அபிவிருத்தியில் தொடரிப்பள்ளம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாங்காமம் கிராமத்தில் உள்ள தொடரிப்பள்ளம் நீர்ப்பாசனக் குளம், கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, இறக்காமம் கமநல அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.

 

அம்பாறை மாவட்ட கமநல அபிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சாமினி தோமதாஸ, இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் நஹிஜா முசப்பீர் ஆகியோர் கலந்துகொண்டு, நீர்ப்பாசன குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அண்மையில் அங்குராப்பணம் செய்து வைத்தனர்.

இந்த நீர்பாசனக் குளம் புனரமைப்பு செய்யப்படுவதன் மூலம் சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .