2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹிஜ்றா நகர் கிராமம் பின்தங்கிய பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 55 இலட்சம் ரூபாய் நிதியில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பாடசாலை வீதி, பள்ளிவாசல் வீதி மற்றும் மத்திய வீதிக்கான வடிகான் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டத்துக்கு திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், இன்று வெள்ளிக்கிழமை (30) அங்குராப்பணம் செய்து வைத்தார்.

இதற்கென 55 இலட்சம் ரூபாய் நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.எம். முஸ்ஸரத், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாசித் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .