Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் 400 இலட்சம் ரூபாய் பொறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் வைபவம், சனிக்கிழமை(02) நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (31) வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சராக பதவி வகித்தபோது, ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளி நோயாளர் பிரிவு கட்டடம், மருந்துக்களஞ்சியம், இயன் மருத்துவ அலகு, தாதியர் விடுதிக் கட்டடம், நடைபாதை, அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடம், சாரதி விடுதி என்பன திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சு நிதி மூலம் 400 இலட்சம் ரூபாய் பெறுமதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்வரும் மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், பிரதி அமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.எல்.ஏ.அமீர், கே.எம்.அப்துல் ரசாக், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், ரி.கலையரசன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago