2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் களப் பரிசீலனை

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட, அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்காக அமைக்கப்பட்டுவரும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15  வீடுகள், 5 மில்லியன் ரூபாய் செலவிலான மலசலகூடங்கள், பல்தேவைக் கட்டடம் மற்றும் பாதை சீரமைப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் களப்பரிசீலைனை, சனிக்கிழமை (19) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில், கண்ணகி கிராமத்தில் இடம்பெற்ற குறித்த நேரடி விஜயகளப் பரிசீலனையில், புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.டபிள்யூ திஸாநாயக்க கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில், கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் மீள்கட்டுமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கண்ணகிகிராமத்தில், மேற்குறித்த அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள வீடுகளை அமைச்சரின் தலைமையில் உத்தியோகபூர்வமாகப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் விரைவில் அம்பாறையில் இடம்பெறவுள்ளன.

வீட்டுத்திட்டப் பயனாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகளைக் கொண்டு விரைவாக வீடுகளை அமைத்து முடிப்பது தொடர்பான ஆலோசனைகளை புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் வழங்கியதுடன், சீரமைக்கப்பட்டுவரும் பாதைகளைப் பார்வையிட்டதோடு, பயனாளிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .