2025 மே 03, சனிக்கிழமை

அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

Princiya Dixci   / 2017 ஜனவரி 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில், இறக்காமம் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும், இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களுக்கிடையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (17) நண்பகல் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேசத்தில் கார்பட் பாதை அமைத்தல், வர்த்தகக் கட்டடத் தொகுதி, குளத்தையும் அதனை அண்டிய மைதானத்தையும் அழகுபடுத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்வதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்மி, ஜிப்ரி, றியாஸ் ஆகியோர் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X