2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அம்பாறைக்கு சந்திரிகா இன்று விஜயம்

வி.சுகிர்தகுமார்   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அம்பாறை மாவட்டத்துக்கு, இன்று (19) விஜயம் செய்யவுள்ளார்.  தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, அம்பாறை மாவட்டத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களையும் வாழ்வாதாரப் பொருட்களையும் அவர், மக்களிடம் கையளிக்கவுள்ளார். 

அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு, இன்று (19) வருகை தரும் அவர், மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்பார்.   

அதன் பின்னர், அம்பாறை, திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களின் கிராமங்களுக்குச் சென்று, பல்வேறான அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடுவதுடன், வாழ்வாதாரப் பொருட்களையும் கையளிப்பார்.  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு பிற்பகல் 2மணியளவில் வருகை தரவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில், பனங்காடு கேணிக்கரை பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெறும் விசேட கூட்டத்தில் பங்கேற்பார்.  

அங்கு, பனங்காடு நீர்ப்பாசன திட்டம், தூவல் நீர்ப்பாசனம் மற்றும் ஆடுவளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொள்ளும் மக்களுக்கான வாழ்வாதார பொருட்களை முன்னாள் ஜனாதிபதி கையளிப்பார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .