Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எல்.எஸ்.டீன்
அம்பாறை மாவட்டத்தில் ஏனைய கட்சிகளால் பல அரசாங்க ஊழியர்கள் இடமாற்றம் செயற்பட்டு, அரசியல் பழிவாங்கல் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாவட்ட மற்றும் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் நியமனங்கள், ஜனாதிபதியினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கமைய, அம்பாறை மாவட்ட அமைப்பாளராக ஐ.எச்.ஏ.வஹகாப் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு, அக்கரைப்பற்று ரீ.எப்.சி ஹோட்டலில் நேற்று (21) நடைபெற்றது.
அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த நட்டில் இனரீதியான அரசியல்கட்சிகள் தோன்றியதனாலேயே இனக்குரோதங்களும், இனவன்முறைகளும் தோன்றக் காரணமாக அமைந்தன.
“முஸ்லிம்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொண்டுள்ள வரலாறுகளை நாம் மீட்டுப் பார்க்க வேண்டும்.
“தற்போது முஸ்லிம் கட்சிகளால் அந்த சமூகத்துக்கு எந்தவித நன்மையும் கிட்ட வில்லை. சமூகத்தின் பேரால் கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கான பேரம் பேசும் இயக்கங்களாகக் கட்சிகளை மாற்றிக்கொண்டுள்ள பேரவலம் சமூகத்துக்கு பேராபத்தாகும்.
“ஜனாபதியால் எமக்கு கிடைத்த இந்த அமைப்பாளர் பதவியைக் கொண்டு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவுள்ளதுடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஏற்படுத்தி, இன நல்லுறவையும் வளர்ப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கவுள்ளேன்” என்றார்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025