Princiya Dixci / 2021 மே 02 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது மோட்டார் சைக்கிள் இராணுவ படையணியின் ரோந்து நடவடிக்கை தீவிரம் அடைந்து வருகிறது.
பகல் - இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்துக்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து, பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது கொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் அனுமதிப்பத்திரமின்றிய மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இந்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தவிர, கொரோனா சுகாதார நடைமுறைகளை அவதானித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்களிளும் இந்த மோட்டார் சைக்களிள் படையணி ஈடுபட்டு வருகின்றது.
மோட்டார் சைக்கிள் படையணியானது அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
4 hours ago