Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 29 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரசாங்கக் கட்டடங்களை அமைப்பதற்கான அரசாங்கக் காணிப் பற்றாக்குறை அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது எனத் தெரிவித்த சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஸால் காஸிம், ஆகவே கிடைக்கும் நிதியைக் கொண்டு குறித்த காலப்பகுதியினுள் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது எனவும் கூறினார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக இரத்தச் சுத்திகரிப்புப் பிரிவை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் பற்சிகிச்சைக்கு நவீன இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வும் புதன்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'2020ஆம் ஆண்டுக்குள்; சுகாதாரத் துறையில் காணப்படும் பாரிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
'தற்போது 8,000 தாதி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுவரும் நிலையில், இவர்களுக்கு நியமனங்களை வழங்குவதன் மூலம், தாதி உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.
'மேலும் 200 அம்பியூலன்ஸ் வண்டிகளைப் பெறுவதற்கும் கேள்விமனுக் கோரப்பட்டுள்ளது' என்றார்.
'தற்போது இந்த நாட்டில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்குப்; பற்றாக்குறை அதிகளவில்; காணப்படுகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களிலுள்ள வைத்தியசாலைகளிலேயே வைத்தியர்கள்; மற்றும் தாதி உத்தியோகத்தர்களுக்குஅதிகளவில் பற்றாக்குறை காணப்படுகின்றன.
மூதூர், கிண்ணியா, பொத்துவில், திருக்கோவில், பாணமை, தெஹியத்தகண்டி, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளையும் நவீன வசதி கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களின் நலன் கருதி நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்றுப் பிரதேசங்களில் ஒசுசல விற்பனை நிலையங்களைத் திறந்துவைக்கவுள்ளோம்' என்றார்.
'தொற்றா நோய்களும் பாரிய சவாலாக மாறியுள்ளன. எனவே, இந்த நாட்டில் மலேரியாவை ஒழிப்பதற்கு எவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தோமோ அவ்வாறே, தொற்றா நோய்களையும் முற்றாக ஒழிப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது' என்றார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago