2025 மே 03, சனிக்கிழமை

அம்பாறையில் பலத்த மழை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார், எஸ்.எம்.இர்ஷத், ஏ.எல்.எம். ஷினாஸ், எச்.எம்.எம்.பர்ஸான், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட், தீஷான் அஹமட்

 அம்பாறை மாவட்டத்தில் நேற்று (19) இரவு முதல் இன்று (20) வரை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவந்தது. இதனால், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதான வீதிகள் உட்பட பல வீதிகளும் தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. 

காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதால் கடல் அலைகளின் சீற்றம் பாரிய அளவில் காணப்படுகின்றன. இதனால் கடற்தொழிலாளர் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி வள்ளங்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தினர்.

 அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சில பிரசேங்கள் முடக்கம் செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் இக்காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (20) பலத்த மழையுடனான வானிலையே காணப்பட்டது. 

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - கிண்ணியா, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X