2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அம்பாறை, மட்டக்களப்பில் ஆளுநர் அலுவலகங்கள்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகங்கள், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்படுமென, ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தூரப் பிரதேசங்களான அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து, திருகோணமலைக்கு சமுகமளித்து அதிகாரிகளைச் சந்திப்பதில், மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் குறைக்கும் விதத்தில், இந்த உப அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

“அம்பாறை மாவட்டத்துக்கான உப அலுவலகம், அம்பாறை நகரில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உப அலுவலகம், அடுத்த வாரம் திறந்து வைக்கப்படவுள்ளது.

“ஆளுநரை சந்திக்க விரும்புவோர், ஆளுநர் செயலகத்துடன் தொடர்புகொண்டு, அதுபற்றி அறிந்துகொள்ள முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .