Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
அம்பாறை மாவட்டத்தில் நேற்று இப்படியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
'ஆட்சியாளர்களே கரையோர மீன்பிடி வளங்கள் அழிவதை உடன்நிறுத்து! அகில இலங்கை மீனவர் சம்மேளனம்' என்ற வாசகமிட்டு அச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
ஆனால், இச்சுவரொட்டியில் காணப்பட்ட தமிழ் எழுத்துப்பிழைகள் அதன் தாக்கத்தை குறைத்து மதிப்பிடவைத்ததையும் பார்ப்போர் கருத்திலிருந்து தெரியவந்தது.
அதாவது அதில்'ஆட்சியாளர்களே கரையோர மீன்பிடி வழங்கள் அளிவதை உடன்நிறுத்து! அகில இலங்கை மீனவர் சம்மேளனம்' என்றிருந்தது.
'வளங்கள்' என்பதற்குப்பதிலாக 'வழங்கள்' என்றும் 'அழிவதை..' என்பதற்குப்பதிலாக 'அளிவதை..' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தமையை இங்கு காணலாம்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago