Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 25 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
'அம்பாறை மாவட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றினேன்' என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மனசூர் தலைமையில், அவருடைய இல்லத்தில அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
'நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால், நாடு, மக்கள் மற்றும் வளங்கள் போன்றவை மிக பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியமானதொன்றாகும். கடந்த ஆட்சியின் போது, அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட முறையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரித்தான காணிகளின் உரிமைப்பத்திரங்கள் இருந்தும் அந்தக் காணிகளில் விவசாயம் செய்ய விடாது தடுத்து வந்த நிலை காணப்பட்டது. அவ்வாறானதொரு நிலை, தற்போதுள்ள அரசாங்கத்திலும் நீடிப்பதானது அனுமதிக்க முடியாத ஒன்றாகும்' என்று அவர் தெரிவித்தார்.
'அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டின் உணவு உற்பத்தியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். கடந்த ஆட்சிக்காலத்தில், அம்பாறை மாவட்டத்துக்கென்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையால், இன்று ஒலுவில் பிரதேசம் மிகவும் மோசமான கடலரிப்புக்கு உள்ளாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பல தென்னந்தோப்புக்களும், மக்கள் குடியிருப்புகளும், துறைமுகத்துக்கு சொந்தமான கட்டடங்களும் கடலரிப்புக்குள்ளாகி படிப்படியாக நிலங்களை கடல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்த மீனவ தொழிலை மேற்கொள்ள முடியாதவர்களாக சொல்லென துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்' என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
ஆகவே, இந்த விடயங்கள் தொடர்பாக கடந்த அரசாங்கம் பாராமுகமாக இருந்தாலும், இந்த ஆட்சியிலும் இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்கக்கூடாது என்றார்.
50 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago