2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை தொடர்பிலான சந்திப்பு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட கரும்பு செய்கை விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கோரிய மகஜர் ஒன்றை சம்மந்தப்பட்ட விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் கொண்ட குழுவினர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரிடம் கையளித்தனர்.

இவர்களுடனான இச்சந்திப்பு நேற்று (13) அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம், தீகவாபி, நுரைச்சோலை விவசாய சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில், ஆலங்குளம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் யு.கே.சம்சுதீன் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட ஆலங்குளம், தீகவாபி, நுரைச்சோலை விவசாயிகளின் 1,200 ஏக்கர் உத்தரவுப்பத்திர காணியில் கடந்த 1958ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை இக்காணியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

1965ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் ஹிங்குறானை சீனி தொழிற்சாலைக்குமிடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்துக்கு இணங்க, குறித்த ஆண்டிலிருந்து 30 வருடங்களின் பின்னர் மீண்டும் விவசாயிகளின் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்துக்கு அமைவாக கடந்த 1990ஆம் ஆண்டுவரை இக்காணிகளில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஹிங்னுராணை சீனி தொழிற்சாலை கடந்த 1991 ஆம் மூடப்பட்டது. இவ்வாண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை குறித்த காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

2014 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 3 போகமாக அதாவது சுமார் 2 வருடமாக இக்காணிகள் தரிசு நிலமாக காணப்படுகின்றன. இது சம்மந்தமாக அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் பல தடவைகள் இக்காணி உரிமையாளர்களினால் இப்பிரச்சினையை தீர்த்துத்தருமாறு கோரிக்கை விடுத்து வந்தது மட்டுமின்றி 2015.12.10ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமும் செய்யப்பட்டது.

ஆனால்,இதுவரை எந்தவித உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

இதுதொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

உங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில், இது தொடர்பிலான உயர் அதிகாரிகளையும் 3 சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட காணி உரிமையாளர்களையும் அழைத்து அவர்களுடன் பேசி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X