Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் கிளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைஷால் காசிம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நீண்டகாலமாக பொதுமக்களால் விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கமையவே, ஒசுசல நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், இப் பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை, பொத்துவில், திருக்கோவில், பாணமை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேச மக்கள் நன்மையடைவர் என்றார்.
மேலும்,இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் வாரம் அம்பாறை மாவட்டத்துக்கு அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் விஜயம் செய்யவுள்ளனர்.
இக்குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக அரச ஒசுசல கிளை நிறுவப்படும் எனவும் தெரிவித்தார்.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago