2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறையில் செயலமர்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் வலய, கோட்ட மட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்களாக கடமையாற்றம் ஆளணியினருக்கான செயலமர்வு நேற்று ( 14) அம்பாறை
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில்,திருக்கோவில் வலய பிரதி கல்விப் பணிப்பாளர் என்.வரணியா, கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் பீ.எம்.யஸீர் அரபாத்,சம்மாந்துறை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறூக்,காரைதீவு கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.பரதன் கந்தசாமி,அம்பாறை மாவட்ட சுற்றாடல் இணைப்பாளர் எம்.ரீ.நௌபல் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X