2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறையில் மகா போகம் ஆரம்பம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகாபோக நெற்செய்கைக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகாபோக நெற்செய்கை 149,500 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதுடன் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, தீகவாபி, வீரயடி ஆகிய வலயங்களில் சுமார் 30,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள கமநலசேவைகள் மத்திய நிலையத்தினூடாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக் கூட்டங்களை நடத்தி விதைப்பு வேலைகள் ஆரம்பிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

இம்முறை மகாபோக நெற்செய்கை விதைப்பு வேலைகளை ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஆரம்பகட்ட வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X