2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அரசியல் யாப்பு தொடர்பான கருத்தரங்கு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அரசியல் யாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக அரசியல் யாப்புக் கற்கைகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு, காரைதீவு பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நாளை மறுதினம்(05) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் அரசியல் யாப்புத்துறையில் விசேட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களான நவரத்ன பண்டார, உபுல் அபேரத்ன, அதுல விதானவசம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இதன்போது பங்குபற்றுனர்கள், தமது கருத்துகளை பதிவு செய்ய முடியும் என்பதுடன், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எழுகின்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டு, கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .