Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 02 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் பங்கேற்காத சில திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சர்களுடாக, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் ஒருங்கிணைப்பில், புதன்கிழமை (01) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டதை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பிக்கும் நிலையில், பல அரச திணைக்கள அதிகாரிகள், அங்கு சமூகமளித்திருக்கவில்லை. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில மணி நேரங்களின் பின்னரே, ஒரு சில அதிகாரிகள் சமூகமளித்தாலும், முக்கியமான திணைக்களங்களின் அதிகாரிகள், இறுதிவரை வருகை தராமலும் சில திணைக்களங்களின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்குப் பதிலாக, வேறு சில அதிகாரிகளே கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அங்கு தொடர்ந்துரையாற்றிய கவீந்திரன் எம்.பி,
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக, மக்களின் குறைநிறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலாக நடைபெறும் இக்கூட்டங்களை, உரிய அதிகாரிகள் இல்லாமல் நடத்தவது அவசியமில்லை எனவும் அவர்கள், மக்களுக்கு செய்யும் துரோகமாகவே இதனைக் கருதமுடியும் எனவும், குறிப்பிட்டார்.
இதேவேளை அங்கு உரையாற்றிய பொத்துவில் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பளரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீத், தமிழ்ப் பிரதேச செயலகங்களிலேயே இவ்வாறான நிலை தொடர்வதாகக் கூறினார்.
இதனையடுத்து இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வின் போது, அத்தியாவசியத் தேவையான சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 30.99 மில்லியன் ரூபாயில் ஒரு சதமேனும் செலவு செய்யப்படவில்லை எனவும் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 59.11 மில்லியன் ரூபாயில் 3.92 மில்லியன் ரூபாய் மாத்திரம் செலவு செய்யப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தில் செயலாற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை, வினைத்திறனற்று செயலாற்றுவதாகவும் பொருத்தமில்லாத அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவது தொடர்பிலும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தரம் குறைக்கப்படும் நிலை குறித்து, இதன்போது ஆராயப்பட்ட நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சமூகமளிக்காததன் காரணத்தால், முழுமையான விளக்கத்தினைப் பெறமுடியாமல் போனதாகவும், தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago