Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை(7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இவ்வாறு பிடிக்கப்பட்ட உயிரினம் நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். (Smooth-coated Otter) இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படகூடியதாகும் . மற்ற நீர் நாய்களை விட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது. ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்கு போன்ற விரலிடை தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்பு போல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
10 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago