2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

அறிக்கை தொடர்பாக விளக்கம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அதன் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இச்செயலமர்வு, நிந்தவூர் ஈ.எப்.சீ. வரவேற்பு மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரை இடம்பெறுமென, பேரவையின் செயலாளர் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், அதிலுள்ள நன்மை, தீமைகள், சிறுபான்மையினருக்கு ஏற்படவுள்ள பாதகங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவூட்டப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X