Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 21 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
தனியார் அலைபேசி விற்பனை நிலையம் ஒன்று திருடர்களால் உடைக்கப்பட்டு, மீள்நிரப்பு அட்டைகள், அலைபேசிகள், பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை, கல்முனை - மருதமுனை பிரதான வீதியில் உள்ள தனியார் அலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று (21) அதிகாலை இத்திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இம்முயற்சியில் இரு திருடர்கள் ஈடுபட்டுள்ளதுடன், தனியார் அலைபேசி விற்பனை நிலையத்தையே முழுமையாக உடைத்து திருடிச் சென்றுள்ளதுடன், அருகிலிருந்தஏனைய கடைகளை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்காமையால் அவர்கள் கொண்டு சென்ற இரும்பு வெட்டும் உபகரணத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சைக்கிள் ஒன்றில் வருகை தருவதும் தங்களை அடையாளம் தெரியாத படி உரப்பையால் முகங்களை முடி இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமையும் அருகே உள்ள வர்த்தக நிலைய சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் கடும் மழை பெய்த வேளை இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பப இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கல்முனை பொலிஸார் வருகை தந்,து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விற்பனை நிலையத்தில் 30 அலைபேசிகள் 55,000 ரூபாய் பணம் பல்வேறு தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன திருடர்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago