2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்?

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பெரிய தொழிற்சங்கங்கள் மீது காணப்படும் குறைபாடுகள், அதிருப்திகள் காரணமாக புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சி  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழம்பெரும் பெரும் தொழிற்சங்கங்கள் தமது அமைப்புகளின் ஆரம்பகால உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமை, அரசியல் ரீதியில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை, தேர்தல் காலத்தில்   வேண்டா வெறுப்பாக நடந்து  கொண்டமை, தங்களின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் கட்சி தலைமைகள் ஈடுபாடு காட்டாமை, சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமை, கட்சியில் ஒரு சிலருக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து சிரேஷ்ட உறுப்பினர்கள்  பாரபட்சமாக நடத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டமை உட்பட பல்வேறு கருத்து முரண்பாடுகளால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிய தொழிற்சங்கம் தோற்றம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள், அனுபவசாலிகள், கல்வித்துறை சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் போன்றோர் ஒன்றுகூடி தொழிற்சங்கத்தை உருவாக்கி பதிவு செய்யவும், அதை அரசியல் கட்சியாக பதிவு செய்யவும் யாப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த மாதத்தில் பதிவுகள் இடம் பெறலாம் என்றும் தெரிய வருகிறது.

 பி.கேதீஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .