2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

7 மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். 

அத்தோடு, வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் வீதிகள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் கிடைக்கபெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .