2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அஷ்ரப் நகரில் மூலிகைத் தோட்டம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அஷ்ரப் நகரில் 50 ஏக்கரில் தேசிய சுதேச மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரதி அமைச்சர் பைஷால் காசீம் மேற்கொண்டு வருவதாக சுதேச மருத்துவ அபிவிருத்திக்குப் பொறுப்பான விசேட இணைப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இத்திட்டம் பாரிய உதவியாக இருக்கும். இந்த மூலிகைத் தோட்டத்தின் மூலம் தேவையான மூலிகைகளை பெறமுடியும். அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 100 இற்கு மேற்பட்ட படித்த இளைஞர், யுவதிகளுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X