2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அஸ்ரபின் நினைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரபின் 17ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகள், வரும் சனிக்கிழமை (16) நடைபெறவுள்ளன.

 

எம்.எச்.எம். அஸ்ரப், 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அரநாயக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமானார்.

இத்தினத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிவாயல்களினால் பல்வேறு அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள், பிரார்த்தனைகள், மர்ஹூம் அஸ்ரபின் நினைவுப் பேருரைகள் என்பனவற்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள், மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இத்தினத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் பொத்துவில் பிரதேசத்தில், 50 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புதிய சந்தைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 165 மில்லியன் ரூபாய் செலவில் வீதி, வடிகான் என்பனவற்றை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்படவுள்ளதுடன், இரத்ததான நிகழ்வு, துஆ பிரார்த்தனை என்பனவும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, தேசிய காங்கிரஸால் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் மர்ஹூம் அஸ்ரபின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும், அட்டாளைச்சேனையில்  மரநடுகை, துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன.

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் நடத்தப்படவுள்ள நினைவு தின நிகழ்வுகளில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

தேசிய காங்கிரஸால் நடத்தப்படவுள்ள நினைவு தின நிகழ்வுகளில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .