Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன், எஸ் ஜமால்டின்
“தேசிய பாடசாலைகளில் இருந்து மாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளில் இருந்து தேசிய பாடசாலைகளுக்கும் ஆசிரியர்களை பரிமாற்றிக் கொள்கின்ற நடைமுறை ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு மிக விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்” என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொத்துவில் அல் கலாம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவும் புதிய மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வும் செவ்வாய்கிழமை (08) நடைபெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று வடக்கு- கிழக்கை ஒன்றிணைப்பதைவிட தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றினணைய வேண்டும். இதுவே முக்கியமான விடயமாகும். ஏனென்றால் நாம் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டவர்கள்.இந்த நாட்டில் இரண்டு துருவங்களாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றிணைய முடியுமானால் ஏன் ஓரு மொழி பேசுகின்ற தமிழர்களாகிய நாம் ஒன்றிணையக் கூடாது” என்றார்.
“வடக்கிலும் கிழக்கிலும் மாகாண தமிழ் கல்வி அமைச்சர்கள் இருப்பததால் இங்குள்ள பாடசாலைகளை அவர்களுடன் கலந்து பேசி அபிவிருத்தி செய்ய முடிகின்றது. இந்த நிலை மத்திய, ஊவா மாகாணங்கிலும் ஏற்பட வேண்டும். மாகாண கல்வி அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது” எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025