2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘ஆட்சியாளர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது’

Princiya Dixci   / 2022 மார்ச் 20 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

​​​​"மின் துண்டிப்பு" எனும் பெயரில் ஆட்சியாளர்களுக்கு இறை தண்டனை கிடைத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கவிடாமல் பலாத்காரமாக எரித்ததன் சாபத்தை அவர்கள் இன்று அனுபவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் நேற்று (19) இடம்பெற்ற  "ரிஷாத் பதியுதீன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்" பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

“ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

“நேற்று முன்தினம் ஒரு காட்சி, நேற்று கட்சி, நாளை ஒரு கட்சி என உலகத்தில் எந்த ஜனாதிபதிக்கும் நடக்காத விடயம் நமது நாட்டில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும், “இளைஞர் சமூகத்தை குறிவைத்து அவர்களை அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடும் போதை வஸ்துப் பாவனை எமது சமூகத்தில் வேகமாக ஊடுருவி வருக்கிறது.

“எனவே, நமது இளைஞர்களை விளையாட்டு கழகங்கள் உடைய பிரதிநிதிகள் வழி நடத்த வேண்டும். அவர்களுக்கு விழிப்பூட்டல் செய்யவேண்டும். சமூகத்தில் பலம் வாய்ந்த சக்தியாக இளைஞர் சமூகம் மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்”  என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .