Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இராணுவத்தின் உதவியுடன் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (31)முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய, இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களுக்கு, அம்பாறை மாவட்டத்தின் 241ஆம் படைப் பிரிவின் கீழ் வரும் இராணுவத்தின் மருத்துவ பிரிவினரால் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, 2ஆம் மற்றும் 3ஆம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, கடந்த காலத்திலும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வைத்திய குழுவினர், அம்பூலன்ஸ் வசதிகளுடன் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசியை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் பிரதேச செயலகம் சுகாதாரத் துறையினருடன் இணைந்து வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago