Freelancer / 2026 மே 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யின் இந்த வெற்றிக்கு இளைஞர்களின் பலமான ஆதரவும், அவர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையுமே முக்கிய காரணம் எனவும் விஜய்யின் அரசியல் பயணம் சிறக்கப் பிரார்த்திப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும்போது அதன் யதார்த்தமான சவால்களை எதிர்கொள்வது அவசியம் எனத் தெரிவித்த அவர், குறிப்பாகத் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் உள்ளது எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்திய அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள கச்சதீவு விவகாரம் குறித்துக் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ , கச்சதீவு என்பது இலங்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவிலிருந்து விசா பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வருமாறு நடிகர் விஜய்க்கு அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார். (a)
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago