Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கிராம அபிவிருத்தி பிரிவினர் முன்னெடுத்த போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம், சுய தொழில் முயற்சி கடன் வழங்கல், சான்றோர் கௌரவிப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள், ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில், நேற்று(28) நடைபெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில், பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கோபிகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் கே.லவநாதன், உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாகிப், நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஜால்டீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“போதையை இல்லாதொழிப்போம்” எனும் கருப்பொருளுக்கமைய நாவற்காடு பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய 'குடி குடியை கெடுக்கும்'' விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தின் உயர்வுக்காய் உழைத்துவரும் பனங்காடு பெண்கள் அபிவிருத்திச் சங்கத் தலைவி அமராவதி வடிவேல், பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்ற எம்.ரி.ஏ.நாகிப், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறந்த சேமிப்புடன் செயற்பட்டுவரும் பனங்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் சேமிப்பில் உள்ள 45 இலட்சம் ரூபாய், 48 அங்கத்தவர்களுக்கு, சுயதொழில் கடனாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
44 minute ago
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
3 hours ago