Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
இன்று நாட்டின் நாற்திசைகளிலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளனவெனத் தெரிவித்த சட்டத்தரணி பி.அறிவினி, “ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குடும்பத் தாபரிப்புத் தொடர்பிலான வழக்குகள் அதிகரித்துள்ளன” என்றார்.
“அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் போராடி, நீதிமன்றத்தின் ஊடாக தமக்கான உரிமைகளைப் பெண்கள் பெற்றுக் கொள்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மகா சக்தி நிறுவனத்தின் தலைவி பியசேன தலைமையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“சட்டரீதியாக மேற்கொள்ளப்படாத எந்தவொரு ஆவணமும் வெற்றுக் காகிதத்துக்குச் சமமாகும் என்பதால், மக்கள் தமது பெறுமதியான ஆவணங்களை, சட்டத்தரணிகள் ஊடாகவே பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“பணம், காணி மற்றும் சொத்துகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இறுதியில் சாட்சியாளர்களே மாட்டிக்கொள்கின்றனர். அவற்றைத் தவிர்க்கவேண்டுமாயின் மக்களாகிய நாம் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்” என்றார்.
மேலும், “நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் குடும்பத் தாபரிப்பு வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கின்ற போது, ஆலையடிவேம்பு பிரதேசம் முதல் நிலை வகிக்கின்றது. இது மக்களின் அறிவு பூர்வமான நடவடிக்கையின் பிரதிபலன் என எடுத்துக் கொண்டாலும் சமூக ரீதியாகப் பார்க்கையில் இது பாரிய பின்னடைவுகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் எனக் கொள்ளலாம்” என்றார்.
“பெண்களின் கல்வியறிவு சதவீதம் அதிகரித்துள்ளதை நாம் பெருமையாகக் கொண்டாலும் பெண்கள் தமது செயற்பாடுகளை மதம், சமூக மற்றும் கலாசாரம் உள்ளிட்டவற்றை சார்ந்து முன்கொண்டுச் செல்லும் போதுதான் ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
12 minute ago
28 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
31 minute ago
36 minute ago