2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இணைந்த சேவைக்காக கல்முனையிலும் பணிப்பகிஷ்கரிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை நகரில் தனியார் பஸ் நிலையத்தை ஏற்படுத்தி தருமாறும் இணைந்த சேவையை உறுதிப்படுத்துமாறும் கோரி, அப்பகுதியில் உள்ள  தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

 

அத்துடன், கல்முனை நகரில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் நிலைய பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, அவர்கள் கோஷங்கள் எழுப்பியதை அவதானிக்க முடிந்தது.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .