Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிக்குமாறு, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இக்கற்கை நெறியை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையை விரும்புபவர்கள் ஆர்வமாக இருப்பதாக தன்னிடம் தெரிவித்துள்ள நிலையிலேயே, இக்கோரிக்கையை முன்வைப்பதாக உபவேந்தரிடம் றியாத் ஏ.மஜீத் சுட்டிக்காட்டினார்.
இதனையெடுத்து, சிலோன் மீடியா போரத்தின் இக்கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு வாரங்களில் இதழியல் கற்கை நெறிக்காக விண்ணப்பம் படிவங்கள் கோரப்படவுள்ளதாக உபவேந்தர் உறுதியளித்தார்.
அதேவேளை, பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் பதவியேற்று ஒரு வருடப் பூர்த்தியை நினைவுகூர்ந்து நினைவுப் பரிசொன்றை, சிலோன் மீடியா போரத்தின் சார்பில் றியாத் ஏ.மஜீத் வழங்கிவைத்தார்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago