2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இரண்டு யானைகள் இறந்துள்ளன

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.கார்த்திகேசு

அக்கரைப்பற்று, அலிக்கம்பை பிரதேசத்தில் 15 வயதுக்குட்பட்ட யானையொன்று இன்று புதன்கிழமை அதிகாலை இறந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஏ.அலீம் தெரிவித்தார்.

இதேவேளை, திருக்கோவில் பொத்துவில் சங்கமன்கண்டிப் பிரதேசத்திலும் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க யானையொன்று இறந்துள்ளது.

பன்றிக்கு வைக்கும் ஒரு வகை வெடியை இந்த யானைகள்  உட்கொண்டதால் அது வெடித்து அவற்றின் வாய்களில் காயம்  ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாத நிலையில் இந்த யானைகள்  இறந்திருக்கலாமென அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X